About Images

அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் உடனுரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சத்திரம் - திருச்சி தல வரலாறு.


சிறந்த பரிகார தலமாக இருக்கிறது திருச்சி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில். சுமார் 1300 வருடங்களுக்கு முற்பட்ட மிகப் பழமை வாய்ந்த சிவாலயம் இதுவாகும். 12 ராசிகளும், ஒரே சக்கர வடிவில் அமையப்பெற்றிருக்கும் இந்த ஆலயம், சித்தர் சிவபீடம் என்று அழைக்கப்படும் ராசி கோவிலாக திகழ்கிறது.



இத்தல இறைவனின் பெயர் ஏகாம்பரேஸ்வரர். அம்பாளின் திருநாமம் காமாட்சியம்மன். இந்த சிவாலயத்தில் வட்ட வடிவிலான பீடம் அமைந்துள்ளது. இந்த பீடத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய பன்னிரண்டு ராசிகளுக்குரிய குறிகள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் ஐராவதம், புண்ட்ரீகன், புஷ்பதந்தன், குமுதன், சார்வபவுமன், அஞ்சனன், சுப்ரதீபன், வாமனன் என திசைகளை காக்கும் அஷ்டதிக் கஜங்கள்(யானைகள்), நாகங்கள், 64 கலைகளை விளக்கக்கூடிய சிற்பங்கள், ஒவ்வொரு ராசிக்கும் உரிய அதி தேவதை, பிரத்தியதி தேவதைகள் ஆகியன 4, 8, 16, 32 ஆகிய எண்ணிக்கையில் வாழ்க்கையின் தத்துவத்தை வெளிப் படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.ந்த பீடத்தின் மீதுதான் அனுக்கிரக மூர்த்தியாக ஏகாம்பரேஸ்வரரும், சாரங்கநாத சித்தர் வழிபட்ட சிவ லிங்கமும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்தியாவிலேயே ஒரே இடத்தில் இது போன்ற சிறப்பம்சங்களுடன் கூடிய சிவாலயம் இதுதான் என்பது கூடுதல் சிறப்பாகும்.



அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், - சத்திரம் - திருச்சி தல வரலாறு.


சாரங்கநாதர் எனும் சித்தர் இந்த ஆலயத்தில் ஏகாம்பரேஸ்வரரை வழிபட்டதாகவும், அவர் இந்த ஆலயத்தில் ஜீவ சமாதி அடைந்துள்ளதாகவும் கருதப்படுவதால், அவர் நினைவாக துளசி மாடமும், அதன் அருகில் சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சித்தர் சன்னிதியில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் மாலையில் யாக வேள்வியும், 210 சித்தர்களின் தமிழ் போற்றி வழிபாடும், அன்னதானமும் நடைபெறுகிறது. இந்த வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்ற பக்தர்கள் தங்களது ஜாதக குறிப்பினை வைத்து எடுத்துச்செல்கின்றனர்.

கோவிலின் வடபுறத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் மரங்கள் அமையப்பெற்றுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மரங்களில் ஒரு குடம் நீர் ஊற்றுவது சிறந்த பரிகாரமாகும். ஆலயத்தின் அக்னி மூலையில் தீர்த்தக் குளம் உள்ளது. ராமர் சொல் கேட்டு அக்னிபிரவேசம் செய்த சீதாதேவி, இக்குளத்தில் நீராடி இங்குள்ள சிவனை வழிபட்டதாக ஐதீகம். எனவே இந்த குளத்திற்கு ‘சீதாதேவி குளம்’ என்ற பெயரும் உண்டு.



அமைவிடம்:


திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பகளவாடி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கரட்டாம்பட்டி தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். கல்லூரியில் சுற்றுச்சுவரை ஒட்டி கிழக்கு திசையில் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் சத்திரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது..



திருக்கோயில் திறக்கும் நேரம்:


இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் பகல் 12 மணி வரையும், இரவு 7.30 மணி வரையும் ஆலய தரிசனம் செய்யலாம். .

Image
Support Work

85%

Image
Trusted Client’s

528+

Image
Client Satisfaction

100%

Image
Cup Coffee

9876

Detail of Siddar Siva Peetam

Video Icon